Monday 17 October 2016

சூப்பர்ஸ்டாரின் பேவரைட் நடிகை இவர் தானாம்!

ரஜினிகாந்த் நடித்த படங்களை பற்றி நிறைய கேள்விப் பற்றிருப்பீர்கள். ஆனால் இங்கே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிடித்தமான ஒன்று.
பிரபலங்கள் என்றால் நிறையபேர் ஆடம்பரமாக வாழ்பவர்கள் என்று தான் நிறைய பேர் நினைக்கின்றனர். இதிலும் சிலர் வீட்டிற்குள்ளே எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




சூப்பர்ஸ்டாரை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அவருக்கு இது தான் பிடிக்குமா?
  • பக்தியில் ஈர்த்தது குரு பக்தி. குருவாய் நினைத்து வழிபட்டது சச்சித்தானந்த சுவாமிஜி.
  • மனதார இவர் நித்தமும் வணங்கும் தெய்வம் ஸ்ரீ ராகவேந்திரர்.
  • இவர் மனம் விரும்பும் வண்ணம் கருமை.
  • பிறந்த இடம் பெங்களூராக இருந்தாலும் பிடித்த இடம் என்னவோ சென்னை தான்.
  • அதிகமாக விரும்பி குடிப்பது பழச்சாறு தானாம்.
  • உணவே மருந்தானாலும் இவர் முன்பு விரும்பி சாப்பிட்டது கோழி, ஆட்டுக்கறி உணவுகள்.
  • கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் தனிமையில் இனிமை காண்பவர்.
  • இவ்வளவு ஏன் மண்டபம் போன்ற வீட்டில் சிறிய பூஜை அறை மட்டும் தான் இவருக்கு இஷ்டம்.
  • இளமை பருவங்களிலும் சரி இப்போதும் சரி தனியாக பயணம் செய்வதே இவருக்கு பிடித்தது.
  • மனதை மயக்கிய சுற்றுலா தளம் இமயமலை தானாம். பாபாஜி அருள் பெற்றவராச்சே.
  • இவருடன் நடிக்க நிறைய நடிகைகள் ஆசை பட்டாலும் இவருக்கு பிடித்த நடிகை ரேகா.
  • பல நடிகர் சினிமாவில் இருந்தாலும் இவரை கவர்ந்த நடிகர் கமல் ஹாசன்.
  • பல பாடல்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தவர் மிகவும் ரசிப்பது சந்திரபாபுவின் பாடல்கள்.
  • அமைதியை விரும்புபவர் அநேகமாக கேட்டு மகிழ்ந்தது இளையராஜாவின் இசையைத்தான்.
  • பலவசனங்கள் பேசியவர் பலநேரம் பார்த்தது கண்ணதாசனின் பாடல் வரிகளையாம்.
  • புத்தகங்கள் நிறைய படிக்கும் இவரை மிகவும் மகிழ்வித்தது பொன்னியின் செல்வன்.
  • படங்களில் பல காட்சிகள் உண்டு, இவர் விரும்பியது டூயட் காட்சிகளைத்தான்.
  • உலகமே பாராட்டும் இவருக்கு ஹாலிவுட்டில் பிடித்தது சில்வர்ஸ்டார் ஸ்டாலோன்.

Thursday 1 September 2016

ரஜினி, தனுஷ் புதிய படத்தின் அதிர்ச்சி பின்னணி

2.0 திரைப்படம் முடிந்ததும் தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவலை நடிகர் தனுஷ் தன்னுடை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
 
 


 
 
இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. நடிகை அமலா பால் விவகாரத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினியிடம் கொண்டு சென்றதாக தகவல்கள் வந்தன. அந்த சமையத்தில் தான் இந்த புதிய படம் குறித்தான அறிவிப்பும் வந்தது.
 
இதனையடுத்து ரஜினிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க போகிறார் என்ற கூடுதல் தகவலும் உலா வந்தது. இந்நிலையில் ரஜினி, தனுஷிடம் அமலா பால் விவகாரம் குறித்து கடிந்து கொண்டதாகவும், பல சமரச பேச்சுக்களுக்கு பின்னர் தனுஷ் தயாரிப்பில் ஒரு படம் நடித்துக்கொடுக்க ரஜினி சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
 
அமலா பாலை கழட்டி விடவே ரஜினி இந்த படத்துக்கு சம்மதித்ததாகவும் பேசப்படுகிறது. அவருடன் எந்த தொடர்பும் கூடாது, எந்த படத்திலும் அவருடன் நடிக்க கூடாது போன்ற கண்டிஷன்களுடனேயே இந்த புதிய படத்துக்கு ரஜினி சம்மதித்ததாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

Monday 11 July 2016

2016 அரையாண்டு தமிழ் சினிமா : அசத்தலா? அச்சமா?


2016ம் ஆண்டின் அரையாண்டு திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அதிக சிக்கல்கள் எதுவுமில்லாமல் வெற்றிகரமாக கடந்து போயுள்ளது.

pongal-2016-release.jpg

2014, 2015ம் ஆண்டுகளில் 200க்கும் அதிகமான படங்கள் வெளிவந்தன. அதே போல இந்த 2016ம் ஆண்டிலும் அந்த எண்ணிக்கை தொடரும் என எதிர்பார்க்கலாம்.


ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் முடிய 107 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 107 படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை 7ஐக் கூடத் தாண்டவில்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை.

மெகா ஹிட் 3 : மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் 'ரஜினி முருகன், பிச்சைக்காரன், தெறி' ஆகிய மூன்று படங்களை மட்டுமே சொல்ல முடியும். இந்தப் படங்கள் அனைத்து விதமான ஏரியாக்களிலும் மிகப் பெரும் வசூலுடன் படத்தை வாங்கி வினியோகம் செய்தகவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும், தியேட்டரில் கேன்டீன் நடத்தியவர்களுக்கும், பைக், கார் டோக்கன் போட்டவர்களுக்கும் வரை லாபத்தை அள்ளிக் கொடுத்த படங்களாக அமைந்தன.


'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி மூலம் சிவகார்த்திகேயன் அனைத்து ஏரியாக்களிலும் விரும்பப்படும் ஒரு நாயகனாக உயர்ந்துள்ளார். விஜய், அஜித் படங்களுக்குரிய வசூலையும், லாபத்தையும் அவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. விஜய் ஆண்டனி நடிகரான பின் அவருக்கு மிகப் பெரும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்த படம் இது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் இப்படம் சுமார் 20 கோடி வரை லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள்.

'தெறி' படத்தின் வெற்றி அனைவரும் எதிர்பார்த்த ஒரு வெற்றிதான். விஜய், மீண்டும் தன்னை பாக்ஸ்-ஆபீஸ் நாயகனாக நிரூபித்த படம். அவருடைய முந்தைய படங்களின் வரலாற்றை இந்தப் படம் முறியடித்தது. 100 கோடிக்கும் மேல் வசூல் பெற்று இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் முதலிடத்தைப் பிடித்த படம் இது.

ஹிட் படங்கள் : மாபெரும் வெற்றியை அடுத்து வெற்றி பெற்ற படங்கள் என்ற பட்டியலில் சில படங்கள் இடம் பிடித்துள்ளன. அதில், “இறுதிச் சுற்று, அரண்மனை 2, விசாரணை, சேதுபதி, தோழா, 24, மருது, மனிதன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

பெண் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கிய 'இறுதிச் சுற்று' படத்தின் வெற்றி எதிர்பாராத வெற்றி. மாதவனுக்கு தமிழில் மீண்டும் ஒரு சுற்று வர இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

'அரண்மனை' படத்தின் வெற்றி போலவே இல்லையென்றாலும் 'அரண்மனை 2' படத்தின் வெற்றி ஓரளவிற்கு அமைந்தது. பி அன்ட் சி சென்டர்களில் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வசூலைத் தந்ததாகச் சொல்கிறார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விசாரணை' படம் பார்த்தவர்களையும் மிரள வைத்த படமாக இருந்தது. அந்த அளவிற்கு இப்படியெல்லாமா விசாரணை செய்வார்கள் என சாமானியனுக்கும் இந்தப் படம் புரிய வைத்தது. 'ஏ' சென்டர்களில் அதிக வரவேற்பைப் பெற்ற படமாக இருந்தது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த 'சேதுபதி' பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் மிதமான வெற்றியைப் பெற்றது. இன்னும் கொஞ்சம் அதிகமாக விளம்பரப்படுத்தியிருந்தால் இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

நாகார்ஜுனா தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் தோழா. ஒரு அழகான நட்பைச் சொல்லிய படம், கார்த்திக்கு மீண்டும் ஒரு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.


'24' படத்தின் பட்ஜெட்டை இன்னமும் குறைத்திருந்தால் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும். வெளிநாடுகளில் பெரும் வசூலைப் பெற்ற இந்தப் படம் உள்ளூரில் குறைவான வசூலைத்தான் பெற்றது.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் வெற்றியைப் பெறாமல் இருந்த விஷ்ணு விஷாலுக்கு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஏமாற்றிய படங்கள் : எதிர்பார்த்து ஏமாற்றிய படங்களில் நிறைய படங்கள் உள்ளன. “தாரை தப்பட்டை, கெத்து, கதகளி, பெங்களூர் நாட்கள், மிருதன், காதலும் கடந்து போகும், மனிதன், கோ 2, இது நம்ம ஆளு, இறைவி” ஆகிய படங்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக இருந்தன.

அதிலும் குறிப்பாக இளையராஜாவின் 1000மாவது படமாக வந்த பாலாவின் 'தாரை தப்பட்டை', மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'பெங்களூர் நாட்கள்', முதல் பாகம் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 'கோ 2', விஷாலுக்குத் திருப்புமுனையைத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட 'கதகளி', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'இறைவி' ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிராகரித்த படங்களாக இருந்தன. உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றியை எதிர்பார்த்த 'கெத்து' படம் அவருக்கு ஏமாற்றத்தையே தந்தன. சிம்பு, நயன்தாரா ஜோடியால் பேசப்பட்ட 'இது நம்ம ஆளு' படமும் பெரிதாக சோபிக்கவில்லை.

Sunday 17 April 2016

நம்மையெல்லாம் அருமையா ஏமாற்றிய அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது

திரைப்படக்காட்சி ஒன்றில்.. ஒரு நபர் கூர்மையான கத்தியால் குத்தப்பட்டாலோ.. அல்லது ஒரு உயரமான மலையில் இருந்து கீழே விழுந்தாலோ.. அல்லது மிகவும் கொடுமையான விஷப்பாம்பு ஒன்றிடம் கடி வாங்கினாலோ... அடுத்தது என்ன நடக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும் - மரணம் தான்..!

சினிமாவில் ஏற்படும் மரணம் என்றாலே அது போலி தான் பொய் தான் அதுக்காக அறிவியலின் கீழ் சாத்தியமே இல்லாத ஒன்றை சாத்தியம் தான் என்பது போல் திரைப்படக் காட்சி அமைப்பது எவ்வளவு பெரிய ஏமாத்து வேலை..!? அப்படியாக, நம்மையெல்லாம் 'ரொம்ப அருமையா' அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது..!


ஏமாத்து வேலை நம்பர் #5 :

கொதிக்கும் எரிமலை குழம்பிற்குள் மூழ்கி சாவது..!

அறிவியல் உண்மை :

எரிமலை குழம்பு மரணம் தர வல்லமை யானது தான் அதில் சந்தேகமில்லை. அதற்காக நீச்சல் குளத்திற்குள் மூழ்குவது போல எரிமலை குழம்பிற்க்குள் எதுவும் மூழ்கிடாது என்பது தான் அறிவியல்..!

முதல் வேலை :

1,295 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து 2,282 டிகிரி வரை கொதிக்கும் எரிமலை லாவாவின் மேற்பரப்பானது எந்த விதமான மேற்ப்பரப்பையும் உடைக்கும் வெப்பநிலை கொண்டது. அதன் முதல் வேலை கொலை தான்..!

நடக்காத காரியம் :

எரிமலைக்குழம்பு குறைந்தது 100,000 மடங்கு பிசுபிசுப்புள்ள, தண்ணீரை விட மூன்று மடங்கு கனமானதாக மற்றும் அடர்த்தியானதாக இருக்கும். ஆகையால் அதுனுள் மனிதர் ஒருவர் மூழ்கி சாவது என்பது நடக்காத காரியம் ஆகும்.!

8jB6Bye.jpg

ஏமாத்து வேலை நம்பர் #4 :

மூச்சுதிணறவைத்து கொலை செய்யும் முறை..!

அறிவியல் உண்மை :

ஒரு நபரை மூச்சுதிணறவைக்கும் முறையானது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறை ஆகும். திரைப்பட காட்சிகளில் வருவது போல தலையணை ஒன்றை வைத்து-அழுத்தி ஒருவரை கொலை செய்து விட இயலாது.

எதிர்வினை :

அறிவியலின்கீழ் மூச்சடைக்கப்பட்ட பின்பு மனித உடல் ஆனது ஒரு எதிர்வினை போல தானாகவே நிர்பந்தமாக சுவாசிக்க தொடங்கும்.

மூளை :

இரத்தத்தில் ஆக்சிஜனை பயன்படுத்த மனித உடல் ஆனது 15 நொடிகள் எடுத்துக்கொள்ளும், பின்பு ஒரு நிமிடம் சுவாசம் தடை செய்யப்பட்டால் மூளை செல்கள் பாதிப்படையும், பின்பு மூளை மிகவும் மோசமாக பாதிப்படைய 3 நிமிடங்கள் தேவைப்படும்..!

அரிய நிகழ்வுகள் :

சுவாசம் இல்லாது 40 முதல் 60 நிமிடங்களுக்கு பின்பு கூட உயிர் பிழைத்த அரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளது.

dvYE2dX.jpg

ஏமாத்து வேலை நம்பர் #3 :

சுறா ஒரு மனித வேட்டையாடி, சுறா மனிதர்களை தேடித்தேடி கடித்து கொல்லும்..!

அறிவியல் உண்மை :

நம்பினால் நம்புங்கள், உண்மையில் சுறாக்கள் மிகவும் கூச்சப் பிராணிகள் ஆகும். சொல்லப்போனால் மனிதர்களை சுறாக்கள் பின் தொடர்ந்து வந்து தாக்கி கடித்துக் கொல்லும் பிராணிகள் அல்ல..!

தொடர்பு :

பெரும்பாலான சுறா தாக்குதல் எல்லாம் சுறாக்கள் மக்களால் தூண்டப்படுவதாலேயே நிகழ்ந்துள்ளன. பிற பிராணிகளை போலவே தான் சுறாக்களும் மனிதர்களோடு தொடர்பு கொள்ள விழைகிறது என்ற கருத்தும் உண்டு..!

Tj7RXLF.jpg

ஏமாத்து வேலை நம்பர் #2 :

கிரேனடுகள் அதாவது கையெறி குண்டுகள் உடனடி மரணத்தை ஏற்படுத்தும்..!

அறிவியல் உண்மை :

கையெறி குண்டுகள் அதன் கில்லிங் ரேடியஸ் (Kiling Radius) என்ற எல்லைக்குள் இல்லாத வரையிலாக அது ஒன்றும் உங்களை உடனடியாக துண்டு துண்டாக சிதற வைத்து கொன்று விடாது. நூற்றுக்கணக்கான கிரேனட் வகைகளும் ஒவ்வொன்றிக்கும் தனிப்பட்ட கில்லிங் ரேடியஸ் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

scopXS5.jpg

ஏமாத்து வேலை நம்பர் #1 :

புதை மணல் ஆனது மனிதர்களை உள்ளே இழுத்து கொள்ளும்.!

அறிவியல் உண்மை :

நீச்சல் குளத்திற்குள் குதிப்பது போல நேராக தலையை முதலில் திணிக்காத பட்சத்தில் புதை மணலில் உங்களால் மூழ்கவே முடியாது.

அடர்த்தி :

எரிமைலை குழம்பை போலவே புதை மணலும் மனித உடலை விட மிகவும் அடர்த்தியாக இருப்பதால் மிஞ்சி மிஞ்சிப்போனால் அது உங்கள் இடுப்பு வரை உள்ளே இழுக்கும் அவ்வளவு தான்..!

Sunday 28 February 2016

வருகிறார்கள் காமிக்ஸ் உலகின் கதாநாயகர்கள் -'ஜஸ்டிஸ் லீக்ஸ்' (Justice League)

சுமார் 10 முதல் 15 வருடங்களிற்கு மேலான ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போது பூர்த்தி செய்திருக்கிறார் சாக் ஸ்நைடர்(Zack snyder).

பேட்மேன்-சூப்பர்மேன் படத்தை இயக்கிவரும் சாக் ஸ்நைடர்(Zack snyder)   பெப்ருவரி 23 தேதி  மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார் .

அதுதான்  2000s-2005களில் நம்மை சூப்பர் பவர்கள் மூலம் கட்டிப்போட்ட  காமிக்ஸ் கதாநாயகர்கள்  -'ஜெஸ்டிஸ் லீக்ஸ்  படத்தின் அறிவிப்பு பற்றிய தகவல்! வெளியானதுதான் தாமதம் அதற்குள்ளேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக ட்ரெண்டாகதொடங்கியது..

அந்த அளவிற்கு ரசிகர்களிடையே ஆரம்பகாலங்களில் 'ஜெஸ்டிஸ் லீக்ஸ் மிகுந்த  வரவேற்பை பெற்றிருந்தது..




வரலாறு

250px-Justiceleague_v2_01.jpg

DC காமிக்ஸ் வகையை சேர்ந்த இந்த ஜஸ்டிஸ் லீக்ஸ் 1960 களில் GARDNER FOX என்பவரால் உருவாக்கப்பட்டது.

DC காமிக்ஸ்இன் ஏழு பிரபலமான சூப்பர் ஹீரோகளை ஒன்றிணைத்த ஒரு குழு அமைப்புதான் இந்த  Justice League . அதாவது தற்போதைய avengers குழு போன்ற , ஆனால் avengersன்  தோற்றத்திற்கு முன்பே ஜஸ்டிஸ் லீக்ஸ்  தோன்றியமை குறிப்பிடத்தக்கது.முதன் முதலாக ஜெஸ்டிஸ் லீக்ஸ்   The Brave and Bold காமிக்ஸ் புத்தகத்தில் அறிமுகம்செய்யப்பட்டது.

ஆரம்ப காலங்களில் Justice League அமேரிக்காவை மட்டுமே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுவந்தது,படிப்படியாக 1986 களில் இருந்து ஐரோப்பா மற்றும் உலகம் முழவதும் வெளியாக தொடங்கியது..


phil-cho-jla.jpeg

The seven original members of the Justice League from left to right: Martian Manhunter,Wonder Woman ,AquamanSuperman, Green Lantern ,Batman and The Flash


ஜெஸ்டிஸ் லீக்ஸ் 2000s களில் அனிமேஷன் தொடராக வலம்வரதொடங்கியது


JLU.jpg

ஆரம்ப காலங்களில்  பேட்மேன்,சூப்பர்மேன்,பிளாஷ்  அனிமேஷன்  தொடர்களே மிகவும் பிரபலமாக காணப்பட்டது. இது நாள்வரை காமிக்ஸ் புத்தகத்தில் மட்டுமே வலம்வந்துகொண்டிருந்த  ஜெஸ்டிஸ் லீக்ஸ்  (2001-2004) முதல் வார்னேர் ப்ரொதெர்ஸ்ன் தயாரிப்பில் 23 நிமிடங்கள் ஓடக்கூடிய வண்ண அனிமேஷனாக Cartoon Network ல் ஒளிபரப்பானது. தொடர்ந்து (2004 – 2006) Justice League Unlimited  என மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது..


ஜெஸ்டிஸ் லீக்ஸ் இந்தியாவிலும் பிரபலம்

justice-league-unlimited-149795.jpg


Cartoon Network  அலைவரிசை  இந்தியாவில் பிரபலமானத்தில் இருந்து ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட ஆரம்ப தொடர்களில் ஜஸ்டிஸ் லீக்ஸ்கும் தொடரும் ஒன்று இதுவே ஜெஸ்டிஸ் லீக்ஸ் இந்தியாவிலும் பிரபலமடைய முக்கியகாரணமாகஇருந்துவந்தது...இதை தொடர்ந்து Teen Titansம்  மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பானது...


ஏன் இந்த எதிர்பார்ப்பு


1ao5QhL.png

2000sகளில் இருந்து இதுநாள் வரை அனிமேஷனாக மட்டுமே வெளியான ஜஸ்டிஸ் லீக்ஸ்

காமிக்ஸ் உலகின் கதாநாயகர்கள் என ரசிகர்களால்  அழைக்கப்பட்ட 'ஜெஸ்டிஸ் லீக்ஸ்' இது நாள் வரை அனிமேஷனாக மட்டுமே வெளியாகி சக்கைபோடுபோட்டு வந்தது ,இப்போது முதன் முறையாக ஜெஸ்டிஸ் லீக்ஸ் முழ நீள சூப்பர் ஹீரோஸ்\ திரைப்படகனவு சாக் ஸ்நைடர்(Zack snyder)மூலம் நினைவாகியுள்ளது.

காரணம்பல தடவைகள் இந்த  ஜெஸ்டிஸ் லீக்ஸ் \ திரைப்படமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் பல தடவைகள் அறிவிக்கப்பட்டு மீண்டும்  நிறுத்தப்பட்டது.

ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல முதல் பாகத்திற்கான வேலைகள் ஏப்ரல் 11 முதல் ஆரம்பமாகவுள்ளதையும் உறுதி படுத்தியும் உள்ளார் மேன் ஓப் ஸ்டீல்,300 (பருத்தி வீரர்கள்) புகழ் சாக் ஸ்நைடர்(Zack snyder)..

phon4oY.jpg

அதுமட்டும் இன்றி இதுநாள்வரை காலமும் பேட்மேன்,சூப்பர் மேன்னை வைத்து மட்டுமே  அதிகமான படங்கள் வெளியாகிஇருந்தன ,
ஆனால் இப்போது புது முயற்சியாக  5th August 2016: Suicide Squad, wonder women ( June 2017),  March 2018: The Flash, July 2018: Aquaman,  April 2019: Shazam!  , April 2020: Cyborg, June 2020: Green Lantern Corps ஏனைய சூப்பர் ஹீரோகளையும் வெளிகொண்டுவரும் வார்னெர் ப்ரோதேர்ஸ் இந்த முயற்சி மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

batman-v-superman-dawn-of-justice-e14532

இவ்வருடத்தின் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான பேட்மேன் வஸ் சூப்பர் மேன் அடுத்த மாதம் 25தேதி வெளியாக உள்ள  நிலையில் இச் செய்தி காமிக்ஸ் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

Sunday 7 February 2016

விசாரணை - பிரபலங்களின் வாழ்த்தும் சாமானியர்களின் எதிர்வினையும்

வெற்றிமாறனின் விசாரணை நேற்று திரைக்கு வந்தது. படம் வெளியாகும் முன்பு, படத்தைப் பார்த்த பிரபலங்கள், இதுபோன்று ஒரு படத்தை தமிழில் பார்த்ததில்லை என்று புகழந்தனர்.

 



இயக்குனர் மிஷ்கின் தமிழின் முன்னணி இயக்குனர்களை ஒன்று சேர்த்து வெற்றிமாறனுக்கு பாராட்டுவிழா ஒன்றை நடத்தினார்.
 
இயக்குனர் ராம், விசாரணை படத்தின் மையக்கருத்தை எடுத்துரைத்து படத்தை வாழ்த்தியுள்ளார்.
 
"நீங்களும் நானும் வாழும் இந்த நாடு, இதன் விதிகள், இதன் சட்டம் என எல்லாவற்றையும் விசாரணை செய்ய வருகிறது...
 
திரைக்கலையின் முழுமையோடு
சுவாரசிய நேர்த்தியோடு
அரச பயங்கரவாதத்திற்கு எதிராய்
முதல் தமிழ்ப் படம்...
 
விசாரணை அடையும் வெற்றி
தமிழ் சினிமாவின் வெற்றி..." - என ராம் குறிப்பிட்டுள்ளார். 
 
படத்தைப் பார்த்த பிரபலங்களின் விமர்சனம் பெரும்பாலும் பாராட்டாகவும், வியப்பாகவுமே உள்ளது.
 
"அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமாரை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலமாக வெற்றிமாறன் தன்னை ஒரு பண்பட்ட, நாகரிகமான கலைஞன் என்பதை நிருபித்திருக்கிறார். விசாரணை தவற விடக்கூடாத அனுபவம்" என இயக்குனர் மீரா கதிரவன் வெற்றிமாறனை பாராட்டியுள்ளார்.
 
நேற்று வெளியான விசாரணையை சாமானிய ரசிகர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? "பிரபலங்களின் விமர்சனம் எதிர்பார்த்ததுதான். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி படம் வெளியாகும் அன்றுதான் தெரியும்" என வெற்றிமாறன் குறிப்பிட்டார். பொது ரசிகர்கள் படத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே அவருக்கு முக்கியமாக உள்ளது.
 
சென்னை போரூரில் உள்ள திரையரங்கில் நேற்றைய இரவுக்காட்சிக்கு அரங்கு நிறைந்த கூட்டம். படம் ஆரம்பித்த உடனேயே ரசிகர்களை அது உள்வாங்கிக் கொண்டது. இடைவேளைக்குப் பின், 'பின் ட்ராப்' சைலண்ட். படம் முழுமையாக ரசிகர்களை ஆகர்ஷித்திருந்தது. படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய அபூர்வ நிகழ்வை நேற்று காண முடிந்தது. அந்த கரவொலி விசாரணை படத்தின் வெற்றியை அறிவித்தது.
 
மலினமான காதல் காட்சிகள், உணர்ச்சியை தூண்டும் மேலோட்டமான சமூக அக்கறை, வலிந்து திணித்த சண்டைக் காட்சிகள், காட்சிக்கு தேவையற்ற வெற்று ஆடம்பரம் எதுவுமில்லாமல் விசாரணை சாமானிய ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. இதுவே அந்தப் படத்தின் உண்மையான வெற்றி. 

விசாரணையின் வெற்றியை நமது ரசனையின் வெற்றியாக கொண்டாடலாம்.