Monday 30 November 2015

’கில்லி’ விஜய் சிலருக்கு ஏன் ‘கிலி’ கொடுக்கிறார் தெரியுமா?

விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ வெளியாகி டிசம்பர் 4-ந் தேதியோடு 23 வருடங்களாகிறது. இப்போதைய டிரெண்டுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர்... விஜய்! ஆக, இந்த வாரம் முழுக்க ‘விஜய்-23’ கொண்டாட்டம். 


CM8n_DSMUs_AAUot_S.jpg


விஜய் தனது இரண்டாவது படத்தில் நடித்த போது “இந்தப் பையனை எல்லாம் யார்யா நடிக்கக் கூட்டிட்டு வந்தது?” என ஒரு நடன இயக்குநர் பலர் முன்னிலையிலும் கோபத்தில் திட்டினாராம். இன்று விஜய்க்கும் நடனத்திற்கும் இருக்கும்கெமிஸ்ட்ரி பற்றி நாம் எதுவும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுதான் விஜய். அவரது கடின உழைப்பிற்கு இது ஒருசோறு பதம். கடந்த 23 வருடங்களில் ஒவ்வொரு படத்திலும் தன் உழைப்பின் அடர்த்தியை, அனுபவத்தை அடுத்தடுத்ததளத்துக்குக் கொண்டு செல்பவர் விஜய். அவருடைய 23 வருடப் பயணத்தில் சில மைல்கற்களைப் பார்ப்போமா…!?


அறிமுக நாயகன்

விஜயின் 58 படங்களை 5 வகையாகப் பிரிக்கலாம். முதலாவது தனக்கென ஒரு பாதை இல்லாது வெறும் நடிப்பு ஆசையை மட்டுமே வைத்துக்கொண்டு நடித்த ஆரம்பக்காலப் படங்கள்.அவற்றை இப்போது அவரே விரும்பமாட்டார்.அதை விட்டுவிடலாம்.
 

சாப்ட் அன்ட் சிம்பிள் ஹீரோ


அவரது 9வது படம் பூவே உனக்காக இரண்டாம் வகை.குடும்பச் செண்டிமெண்டுகள் நிறைந்த காதல் கதைகளில் நடித்தார். பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை,துள்ளாத மனமும் துள்ளும் என அந்த வகையில் அவர் அடித்த அடி இன்றும் முறியடிக்கப்படாத சதங்கள்.

 ரோம்-காம் ஹீரோ


அதன் பின் விஜய்க்கு இறங்குமுகம். போட்டியின்றித் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு என்றென்றும் காதல்,மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு எனத் தொடர் தோல்விகள். அவ்வளவுதாம்ப்பா விஜய் என்றார்கள்.இது நடந்த போதுதான் சேது, வாலி, அமர்க்களம் என விஜய்க்குப் போட்டியாளர்கள் உருவாகி கொண்டிருந்தார்கள். தனதுபாதையைச் சற்றே மாற்ற வேண்டுமென முடிவு செய்த விஜய் அடுத்து நடித்தது குஷி மூன்றாம் வகை. உடைகள், நடனம்,பாடி லேங்ஜுவேஜ் எனச் சகலமும் மாற்றிக் கொண்டு வந்தார். அபாரமான ஒப்பனிங். அலைபாயுதே, கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன் என ’ஏ’ செண்டர் படங்கள் வெளியான சமயத்தில்தான் குஷியும் வந்தது. சத்யமில் இதன் பரபரப்பானஓப்பனிங் கண்ட அந்தத் திரையரங்க உரிமையாளர் சொன்ன வார்த்தை “இவன் நிஜமாவே அடுத்த ரஜினிதாம்ப்பா”. குஷியில் மீண்டும் வெற்றிக்கொடி ஏற்றியவர் தொடர்ந்து ப்ரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி ரோமான்டிக் காமெடி மற்றும் காதல் படங்களில் பட்டையைக் கிளப்பினார்.

 திருமலை போட்ட அதிரடிப்பாதை 


tirumalai.jpg


மீண்டும் ஒரு குழப்ப நிலை. யூத், பகவதி போன்ற சில படங்கள் வணிக ரீதியாகத் தப்பித்தாலும் ஷாஜஹான், தமிழன்,வசீகரா, புதிய கீதை எனத் தோல்விகள். வசீகராவில் அவரது நகைச்சுவை கலந்த நடிப்புப் பின்னர்ப் பாராட்டப்பட்டாலும் படம் வெளிவந்த போது அது தோல்வியே. அஜித், விக்ரம் என்ற இரு போட்டிகள் அதற்குள் விஸ்வரூபமெடுத்து நிற்க,கூடவே நந்தா, மெளனம் பேசியது எனப் பவுண்டரி அடித்த சூர்யா காக்க காக்க எனச் சிக்சர் நொறுக்கி மஸ்து காட்டினார்.


2003 தீபாவளிதான் நிஜமான பரீட்சையாக இருந்தது. வில்லன் என்ற வெற்றியை தொடர்ந்து அஜித் போலீஸாக நடித்த ஆஞ்சநேயா,. தூள்,சாமி என்று கமர்ஷியல் காக்டெயில் அடித்த விக்ரம் மீண்டும் பாலாவோடு பிதாமகன். உடன் சூர்யா.இவர்கள் ஒரு பக்கம். தொடர்தோல்விகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகக் கருதப்பட்ட விஜய், புதுமுக இயக்குநரான ரமணாவை மட்டுமே நம்பி ’திருமலை’ எனக் களமிறங்கினார் விஜய்.  கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அடுத்தச் சூப்பர்ஸ்டார் போட்டிக்கு நாமினேட்ஆகியிருந்த நான்கு பேரும் மோதின நாள் அன்று.


ஆனால் விஜயின் மாஸ் என்றால், என்னவென்று தமிழ் சினிமா உணர்ந்த தருணம் அது. ஏன்… விஜய்யும் கூட! ’பிதாமகன்’ க்ளாஸிக் அந்தஸ்துடன் தேசிய விருது பெற்றாலும், பல படங்களுக்குப்பிறகு விஜய்யின் ‘திருமலை’ திரைஅரங்குகளில் நின்று விளையாடியது. தொடர் தோல்விகளால் துவண்ட ரசிகர்களுக்குத்தனது புது அவதாரத்தின் மூலம் க்ளுக்கோஸ் பாய்ச்சினார் விஜய். திருமலையில் வசனம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதில்புகழ் பெற்ற ஒரு வசனம்
 

:hooray:  “இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”  :hooray:



8_Iqep_SF.jpg



கதைக்கான நாயகன்


விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்திருந்தது. திருமலை,நான்காம் வகை. அதன்வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். திருமலை, கில்லி,திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என டாப்கியரில்போய்க் கொண்டிருந்தார் விஜய். ’இங்கே ஒரு பள்ளம் இருக்கணுமே’ என்பது போலச் சில சங்கடங்கள். குருவி, வில்லு என மெகா தோல்விகள். ’வேட்டைக்காரன்’ சற்றே ஆறுதளிக்க, ’சுறா’ வந்து சூறையாடியது. மீண்டும் ஒரு மந்தம். மீண்டும் பாதையை மாற்ற வேண்டிய நேரம்.


அதன் பிறகுதான் கதைக்கும், நடிப்புக்கும் சரிசம முக்கியத்துவமுள்ள, ஹீரோவிற்கான படங்களை தவிர்த்து கதைக்கான ஹீரோவாக தன்னை மாற்றிக்கொண்டார். ஸ்டார் இயக்குனர்களுடன் கைகோர்த்தார். காவலன், நண்பன், துப்பாக்கி, கத்தி என மீண்டும் வெற்றிஊர்வலத்தை நட த்தி வருகிறார். இந்தப் படங்கள் ஐந்தாம் வகை!



இதுவரை விஜய் நடித்த எல்லா ஜானர்களிலும் அவரைப் போல ஹிட் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. அதே சமயம், ‘தான்என்ன செய்தாலும் தன்னை ரசிப்பார்கள்’ என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ் அவருக்கு எப்போதும் கிடையாது. தான் ஒரு“சாக்லேட் பாய்” இல்லை என்பது விஜய்க்கு தெரியும்.


தனது நிறை குறைகளை நன்றாக அறிந்தவர் என்பதால்தான்காலத்திற்கேற்ற, தனக்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். சில கணக்குகள் தவறினாலும், விஜயின் கிராஃப்அவர் முடிவு சரி என்பதையே காட்டுகிறது. பிறந்த குழந்தை முதல் தாத்தாக்கள் வரை ரசிகர்கள்கொண்ட விஜய்க்கு,இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதில் சில தவறுகள் நேரலாம். ஆனால்அவர்களைத் திருப்திப்படுத்த என்றுமே விஜய் தவறியதில்லை.


தன் தவறுகளை சரியான நேரத்தில் உணர்ந்து திருத்திக்கொள்வதால்தான்  எப்போதும் வெற்றி என்கிற விஷயத்தில் விஜய் நிஜமாகவே “கில்லி”!

Sunday 29 November 2015

தனுஷின் கார் விலை 2.48 கோடி, வரி 2.85 கோடி

கடந்த சில வருடங்களாக நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் கோடிகளில்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.



கோடிகளில் என்றால்... ஒரு கோடி, இரண்டு கோடி என்று நினைத்துவிட வேண்டாம்.

முன்னணி நட்சத்திரங்கள் பலர் இரண்டு இலக்கத்திலான கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால், சம்பாதித்த பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சிலர் சகட்டுமேனிக்கு செலவு செய்வதும் கண்கூடாகத் தெரிகிறது.

பல கோடி மதிப்பில் சொகுசு கார்களை வாங்குவதும் இப்படியான மனோபாவத்தில்தான்.

கோடிக்கணக்கான விலை கொண்ட ஜாகுவார், அவ்டி, ஹாமர், ரோல்ஸ்ராய் போன்ற சொகுசு கார்கள் கோலிவுட்டில் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.

இவற்றில் அதிக மதிப்பு கொண்ட கார் ரோல்ஸ்ராய்தான்.

இந்தக்காரை ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் வைத்துள்ளனர்.

அண்மையில் தனுஷும் ரோல்ஸ்ராய் கார் வாங்கினார்.

இந்தக்காரின் மதிப்பு விலை 2 கோடியே 48 லட்சம். இந்தக்காரை இந்தியாவுக்குள் கொண்டு வர 2 கோடியே 85 லட்சம் வரி செலுத்தி உள்ளார் தனுஷ்.

ஆக.. தனுஷ் வைத்துள்ள ரோல்ஸ்ராய் காரின் மதிப்பு 5 கோடியே 33 லட்சம்.

உலக அளவில் முதல் இடத்தை பிடித்த அஜித்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. மேலும் அஜித் இதுவரை நடித்த படங்களிலேய அதிக வசூல் செய்த படமாக வேதாளம் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இன்று வெளிவந்த சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் இதுவரை வெளிவந்த படக்களில் அதிக வசூலை பெற்று குவித்த படம் வேதாளம்.



சென்னையில் 2-வது வார பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கமலின் தூங்காவனம் படத்தையும், ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் படத்தையும், வசூலில் முந்தி உள்ளது அஜித்தின் வேதாளம்.
வேதாளம் படம் 2-வது வார முடிவில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் 237 காட்சிகள் ஓடி 1.03 கோடி வசூல் செய்து வசூலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் வார இறுதியில் 3.23 கோடி வசூல் செய்து இருந்தது. சென்னையில் மொத்தம் 13 நாட்களில் 5.15 கோடி வசூல் செய்து உள்ளது வேதாளம்.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர் சென்னையில் 2-வது இடத்தில் உள்ளது. அது 150 காட்சிகள் ஓடி 39.23 லட்சம் வசூல் செய்து உள்ளது.
கமலின் தூங்காவனம் 3-வது இடத்தில் உள்ளது மொத்தம் 147 காட்சிகள் ஓடி 32.52 லட்சம் வசூல் செய்து உள்ளது. இந்த படம் முதல் வார இறுதியில் மொத்தம் 1.69 கோடி செய்து உள்ளது.

சல்மான் கானின் “பிரேம் ரதன் தா பயோ” 4-வது இடத்தில் உள்ளது 54 காட்சிகள் ஓடி 14.73 லட்சம் வசூல் செய்து உள்ளது. இந்த படம் முதல் வாரத்தில் 42.93 லட்சம் வசூலித்து உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் வரை இப்படம் 79.98 லடசம் வசூல் செய்து உள்ளது.
புதிய படமான ஒரு நாள் இரவில் 5-வது இடத்தில் உள்ளது. இப்படம் 69 காட்சிகள் ஓடி 9.62 லட்சம் வசூல் செய்து உள்ளது.

இரண்டாவது வார முடிவில் அஜித்தின் வேதாளம் மொத்தம் 117 கோடி அளவிற்கு வசூல் செய்து சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

Tuesday 17 November 2015

என்னை அறிந்தால்-2க்கு தயாரான கெளதம்மேனன்

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்குவதில் தற்போது இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த  வகையில், இதற்கு முன்பு தான் தமிழில் இயக்கிய படங்களை மற்ற மொழிகளுக்கு ரீமேக் மட்டுமே செய்து வந்த கெளதம்மேனன், சூப்பர் ஹிட்டான படங்களைகூட இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால், அஜித்தை வைத்து தான் 
இயக்கிய என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயார் நிலையில் இருக்கிறாராம்.

yennai-arindhaal-shooting-spot-stills-2-

என்னை அறிந்தால் படத்தை இயக்கியபோதே, இந்த படம் ஹிட்டானால் இரண்டாம் பாகத்திற்கான கதையை ரெடி 
பண்ணிவிடுவேன் என்று அஜீத்திடம் கூறியிருந்தாராம் கெளதம்மேனன். அஜீத்தும் அதற்கு ஓகே சொல்லி விட்டாராம். அதனால், 
என்னை அறிந்தால் வெளியாகி வெற்றி பெற்றதும், அடுத்த பாகத்திற்கான கதையை ரெடி பண்ணி வைத்துள்ள கெளதம்மேனன், 
அடுத்து அஜீத் எப்போது கால்சீட் கொடுத்தாலும அந்த படத்தை இயக்க தயாராக உள்ளாராம்.



மேலும், என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை காப்பாற்ற வருபவராக நடித்த அஜீத், கணவரை இழந்து விட்டு ஒரு 
குழந்தையுடன் இருக்கும் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள தயாராவார். அப்போது திரிஷா கொல்லப்படுவார். அதன்பிறகு 
அந்த குழந்தைக்கு தான் அப்பாவாகி விடுவார். ஆனால், இரண்டாவது பாகத்தில் அவரது மகளான அந்த பெண்ணுக்கு ஒரு பெரிய
பிரச்சினை வருமாம். அதிலிருந்து அவரை அஜீத் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதையாம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் 
தெரிவித்துள்ள கெளதம்மேனன், என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய சமூக பிரச்சினையையும் கலந்து கதை 
பண்ணியுள்ளாராம்.

Sunday 15 November 2015

அடை மழையில் சரிந்தது வசூல்: தியேட்டர் அதிபர்கள் கவலை

தீபாவளியையொட்டி கடந்த 10ந் தேதி கமல் நடித்து, தயாரித்த தூங்காவனம் படமும், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படமும் வெளிவந்தது. படம் வெளியான நாள் முதல் தமிழ்நாட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், கமல், அஜீத் ரசிகர்கள் கொடுத்த ஓப்பனிங்கால் வேதாளம் வசூலை தெறிக்கவிட்டது. தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாள் வசூலே 10 கோடியை தாண்டியது என்கிறார்கள். தூங்கவானம் படம் ஆவரேஜான, நிதானமான வசூலை கொடுத்துக் கொண்டிருந்தது.

தீபாவளி செவ்வாய்கிழமை, அடுத்து வந்த புதன், வியாழனும் நல்ல கலெக்ஷன்தான். அடுத்து வரும் சனி, ஞாயிறு கலெக்ஷனை தயாரிப்பாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை கமல், மற்றும் அஜீத்தின் ரசிகர்கள் படங்களை பார்த்துவிட்டார்கள். அவர்கள் அடாத மழை பெய்தாலும், விடாது வெயில் அடித்தாலும் பார்த்து விடுவார்கள்.

பொதுமக்கள் இனிமேல்தான் தியேட்டருக்கு வருவார்கள். ஆனால் அவர்களை வரவிடாமல் மழை கொட்டுகிறது. வானிலை ஆராய்ச்சி மைய தகவல்படி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் அடை மழை பெய்யும் என்று தெரிகிறது. இதனால் வருகிற சனி, ஞாயிறு கலெக்ஷன் பாதிக்கப்படுமோ என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 எந்திரன் - 2 படத்திற்காக ரஜினியின் டூப்புக்கு மேக்கப் டெஸ்ட் :clapping:

NTLRG_151113150639000000.jpg

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்று கிராமத்துப்பக்கம் சொல்வார்கள். அதைப்போல், தோல்விப்படத்தில் நடித்தாலும் ரஜினி ரஜினி தான். அவரது மார்க்கெட், மவுசு, அவருடைய படத்தின் பிசினஸ் எதையும் மற்ற ஹீரோக்களால் எட்டவே முடியாது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் தோல்வியடைந்தாலும் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கபாலி படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.

கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார் ரஜினி. அங்கு படப்பிடிப்பை முடித்த பிறகு தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதை முடித்த பிறகே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார் ரஜினி. இது ஒரு புறமிருக்க, ரஜினி அடுத்து நடிக்க உள்ள எந்திரன் 2 படத்திற்கான மேக்-அப் டெஸ்ட் நடத்திக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து மேக்-அப் மேன் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

ரஜினி கபாலி படப்பிடிப்பில் இருக்க, இங்கே யாருக்கு மேக்கப் டெஸ்ட் நடத்துகிறார் ஷங்கர்? ரஜினியைப் போலவே தோற்றம் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க சில நபர்களை வரவைத்து அவர்களுக்குத்தான் மேக்-அப் டெஸ்ட் நடத்தி வருகிறார் ஷங்கர். இந்த மேக்கப் டெஸ்ட்டில் தேர்வாகும் நபர்தான் எந்திரன் -2 படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பல காட்சிகளுக்கு ரஜினியின் டூப்பாக நடிக்க இருக்கிறார். கபாலி படப்பிடிப்பு முடிந்ததும் எந்திரன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினி. இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


24 ஆம் தேதி 24 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் :clapping: 

NTLRG_151113151238000000.jpg

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள பசங்க-2 இம்மாதம் 27- ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, அமலா பால், பிந்துமாதவி மற்றும் பல சிறுவர்கள் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் மற்றொரு படமான 24 படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. விக்ரம் குமார் இயக்கத்தில் உருவான 24 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது படு வேகமாக நடந்து வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள சூர்யா இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை சூர்யாவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் பெயரும் 24 என்பதால் 24 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்த தேதியை தேர்வு செய்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு 25 கோடி சம்பளம்.? :clapping: 

NTLRG_151113151014000000.jpg

ரஜினி முருகன் படம் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் அதை மறந்துவிட்டு தற்போது தன்னுடைய மானேஜர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் 24AM ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் அடுத்த படத்தை நானும் ரௌடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரிக்கப்போகிறார்.

இவரது தயாரிப்பில் அஜித் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம் படம் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூல் செய்து பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கிடைத்த லாபத்தை அப்படியே தன் அடுத்தப் படத்துக்கான முதலீட்டாக்கிவிட்டார் ஏ.எம்.ரத்னம். அதாவது, தனது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார் ஏ.எம்.ரத்னம்.

சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டு பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் அப்ரோச் செய்திருந்தனர். அவர்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டு ஏ.எம்.ரத்னத்துக்கு உடனடியாய் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்க என்ன காரணம்? ஏ.எம்.ரத்னம் தருவதாக சொன்ன பெரிய சம்பளம்தான் காரணம் என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். சிங்கிள் பேமெண்ட்டாக 25 கோடி தருவதாக சொன்னதால்தான் ஏ.எம்.ரத்னத்துக்கு உடனடியாய் சிவகார்த்திகேயன் டேட் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.

Thursday 12 November 2015

ஹாட்ரிக் வெற்றியில் இயக்குனர் சிவா

சமீபகாலத்தில் எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைக்காத வாய்ப்பு இயக்குனர் சிவாவுக்குக் கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு அஜித் படங்களை இயக்கி இரண்டு படங்களையும் வெற்றிப் படங்களாகவும் கொடுத்துவிட்டார். சிவா இயக்கிய முதல் படமான சிறுத்தையும் பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். ஆக, தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துவிட்டார் இயக்குனர் சிவா.

2002ம் ஆண்டு பிரபுதேவா, பிரபு நடித்து வெளிவந்த சார்லி சாப்ளின் படம் மூலம் ஒளிப்பதிவாளராக திரையுலகத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில தெலுங்குப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். 2008ல் வெளிவந்த சௌர்யம் என்ற தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2011ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான சிறுத்தை மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகானார். 2014 பொங்கலுக்கு வெளிவந்த வீரம் படத்தில் அஜித்தை இயக்கியவர் மீண்டும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம் படத்திலும் அஜித்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முந்தைய படங்களைக் காட்டிலும் வேதாளம் படம் தமிழ்த் திரையுலகில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

முன்னணி மாஸ் கமர்ஷியல் இயக்குனர்களின் பட்டியலில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார் சிவா.

ரசிகர்களை சந்திப்பாரா அஜித் ?

தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளம் படம் வெளிவந்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை விட வேதாளம் கொண்டாட்டத்தைத்தான் அதிகம் கொண்டாடினார்கள். தமிழ்நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர்களின் சொந்த செலவிலேயே திரையரங்குகளை அலங்கரிப்பது, பேனர்கள் வைப்பது என பல விஷயங்களைச் செய்து தியேட்டர்களை திருவிழாக் கோலம் ஆக்கினார்கள்.

கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்களின் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைத்தளங்களில் பார்க்க நேர்ந்தது. பொதுவாக ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிப்பதை அவர்களது சொந்த செலவில் செய்ய மாட்டார்கள். குறிப்பிட்ட நடிகர்தான் ரசிகர் மன்றத்திற்கு பணம் கொடுத்து அனைத்தையும் செய்ய வைப்பார். ஆனால், அஜித் ரசிகர்கள் அவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டு இப்படிச் செய்வது ஆச்சரியமான ஒன்று. அதிலும் அஜித் அவருடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது.

ரசிகர்களின் அளவு கடந்த அன்புக்கும், பாசத்திற்கும் அஜித் என்ன செய்யப் போகிறார். அவர்களது ரசிகர்களே அதை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அஜித்தை ஒரு முறையாவது நேரில் பார்த்து அவரை வாழ்த்த வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அதைக் கூட அஜித் செய்வதில்லை என்ற வருத்தம் அவர்களிடம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

ரசிகர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எப்படியும் அஜித் காதுக்குப் போய்விடும். ரஜினிகாந்துக்குப் பிறகு ஒரு நடிகர் மீது ரசிகர்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் அன்பு செலுத்துவது அஜித்துக்கு மட்டுமே என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்யப் போகிறார். குறைந்தபட்சம் அடிக்கடியாவது அவர்களைச் சந்திப்பாரா ?...

தூங்காவனம் படத்தில் குறையே இல்லையா?



வேதாளம் படம் பற்றியும், தூங்காவனம் படம் பற்றியும் வெளியாகியுள்ள விமர்சனங்களைப் பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இரண்டு படங்களையும் பலரும் இருவேறு விதமாக விமர்சித்துள்ளார்கள் என்ற பேச்சுதான் அதிகம் எழுந்துள்ளது. வேதாளம் படம் பற்றி சொல்ல வேண்டாம், அது பக்கா மசாலாப் படம். அந்த மாதிரிப் படங்களில் என்ன குறை இருந்தாலும் ரசிகர்கள் அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டர்கள். அப்படிப்பட்ட படங்களில் லாஜிக் மீறல்களைப் பற்றியும் பெரிதாகப் பேச மாட்டார்கள். அப்படியே அந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலும் அஜித் ரசிகர்கள் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் படம் இரண்டரை மணி நேரம் விறுவிறுப்பாக நகர்ந்து ரசிக்க வைக்கிறதா என்று மட்டுமே பார்ப்பார்கள்.

ஆனால், தூங்காவனம் படத்தை அப்படிப் பார்க்க மாட்டார்கள். அது கமல்ஹாசனின் படம். தமிழ் சினிமாவில் எந்த குறையும் அதிகமில்லாத படங்களைக் கொடுப்பவர், சினிமாவின் காதலர் எனப் பெயரை எடுத்தவர். படத்திற்கு ராஜேஷ் எம் செல்வாதான் இயக்குனர் என்றாலும் எப்படியும் கமல்ஹாசன் தலையீடு என்பது காட்சிக்குக் காட்சி இருந்திருக்கும். பலரும் தூங்காவனம் படத்தை கிளாஸ் படம் என்கிறார்கள். ஆனால், அந்த கிளாஸ் படத்திலும் குறிப்பிட வேண்டிய பல குறைகள் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் சாதாரண ரசிகர்களும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

கதை நடக்கும் அந்த ஹோட்டல் கிளப்பில் என்னதான் சண்டை, துப்பாக்கிச் சூடு நடந்தாலும் நடனமாடிக் கொண்டிருப்பவர்களும், விளையாடிக் கொண்டிருப்பவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். மூன்று முக்கியமான போலீஸ் அதிகாரிகள் ஹோட்டலுக்கு நுழைந்தது அங்குள்ள செக்யூரிட்டிகளுக்குத் தெரிந்தும் அவர்கள் ஓனரான பிரகாஷ்ராஜிடம் எதுவும் சொல்லாமலே இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் ரூமுக்கு வெளியே தவிர வேறு எங்குமே சிசி டிவி காமிரா இல்லவே இல்லை. கிஷோர் போதைப் பொருளைக் கைப்பற்றியும் ஹோட்டலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். தன்னைத் துரத்தி வருபவர்களிடமிருந்து தப்பிக்க முன் பின் தெரியாத மதுஷாலினிக்கு பல முறை கமல்ஹாசன் முத்தம் கொடுத்து முகத்தை மறைத்துத் தப்பிப்பதெல்லாம் ரொம்ப டூ மச் என்கிறார்கள்.

காசு கொடுத்து வாங்கிதானே கமல்ஹாசன் காப்பி அடித்துள்ளார், அதை கொஞ்சம் சரி செய்து காப்பி அடித்திருக்கலாமே என்கிறார்கள் ரசிகர்கள்.

அமெரிக்காவிலும் தூங்காவனத்தை விரட்டும் வேதாளம்

தமிழ்நாடு முழுவதிலும் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் வேதாளம் படம் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. முதல் நாள் வசூலாக சுமார் 20 கோடி ரூபாய் வரையில் வசூலித்திருக்கலாம் எனச் சொல்லப்படும் வேதாளம் படத்தின் வசூல் இரண்டாவது நாளிலும் முதல் நாளைப் போலவே சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள். தமிழ்நாடு வசூலைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் எந்திரன், கத்தி ஆகிய படங்களின் வசூல் சாதனையை வேதாளம் முறியடித்து விட்டது மட்டும் உண்மை என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இதனிடையே, அமெரிக்கா என்றாலே அது கமல்ஹாசனின் கோட்டை என பட வெளியீட்டிற்கு முன்னர் சொன்னார்கள். ஆனால், அமெரிக்காவிலும் தூங்காவனம் படத்தை பின்னுக்குத் தள்ளி வேதாளம் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமே இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“அமிஞ்சிக்கரையோ அமெரிக்காவோ தல தான் ஓபனிங்குக்கெல்லாம் ராஜா. அமெரிக்காவில் தூங்காவனம் படத்தின் வசூல் 87 திரையரங்குகளில் 76,115 டாலர்கள். வேதாளம் படத்தின் வசூல் 65 திரையரங்குகளில் 92,392 டாலர்கள்” என அறிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் வேதாளம் படத்தின் வசூலை தூங்காவனம் படத்தால் நெருங்க முடியாது என்றே சொல்கிறார்கள். அஜித், விஜய் ஆகியோர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கமல்ஹாசன் தன்னுடைய பட வெளியீட்டை தவிர்ப்பதே சிறந்தது என்று வினியோகஸ்தர்களே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

Sunday 1 November 2015

பெரிய பிரச்சனையில் மாட்டவிருக்கும் அஜித்- எப்படி சமாளிப்பார்?



அஜித் தேவையில்லாத எந்த பிரச்சனைகளில் தலையிட மாட்டார். அந்த வகையில் மத்தியில் ஆளும் கட்சியின் பார்வை தற்போது அஜித் பக்கம் திரும்பியுள்ளது.

ஏற்கனவே இவர்கள் விஜய்யிடம் அரசியல் குறித்து பேச, அதை அவர் மறுக்க புலி படத்திற்கு நடந்ததை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் அந்த கட்சியினர் தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் வட்டத்தை அறிந்து அவரை அரசியலில் ஈடுபட வைக்க முயற்சி செய்கிறார்களாம். ஆனால், அஜித் முன்பே அரசியல் வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்நிலையில் அவர் சம்மதிக்கவில்லை என்றால், விஜய்க்கு பிரச்சனை வந்தது போல் அஜித்திற்கு வர வாய்ப்பு உள்ளது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.